சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க ஒப்புதல்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இறுதிப்பருவத்தில் பயிலும் மாணவர்கள் தவிர, மற்ற பருவத் தேர்வுகளில் தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி வழங்குவதற்கு ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.