மழை காரணமாக 26 மாவட்டங்களில் விடுமுறை !

tn-news-chance-of-heavy-rain
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் புதிதாக மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வருகிறது.

இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டது. 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி,நெல்லை,கிருஷ்ணகிரி, கள்ளகுறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.