9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை !

கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அனைவரும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் கற்று வந்தனர்.இந்த வருடம் ஜனவரி மாதம் சில வகுப்புகள் தொடங்கின.

இந்நிலையில் 9, 10, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே தேர்ச்சியளிக்கப்பட்ட 9,10,11 வகுப்பு மாணவா்களும் பள்ளிக்கு வருவதால் பொதுத்தேர்வை எழுத இருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களும் பள்ளியில் போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினமாக அமைந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் ஆசிரியா் நல கூட்டமைப்பின் தலைவா் விடுத்த செய்திக்குறிப்பில்,பிளஸ் 2 மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு சில மாதிரித் தேர்வுகளையும் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.