விஜய் சேதுபதியின் ‘லாபம்’ லாபமா நஷ்டமா?

விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்தை எதார்த்தமாக நடித்துள்ள போதும் படம் முழுக்க விஜய் சேதுபதி தத்துவங்களாக பேசிக்கொண்டிருப்பது நடிக்கும் வாய்ப்பை குறைத்துள்ளது.

ஸ்ருதி ஹாசன் சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றினாலும், அவரின் கதாபாத்திரம் படத்திற்கு எந்த வகையிலும் உதவாமல் போவது நீண்ட நாட்களாக நடிக்காமல் ஓய்வில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பிலும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

இப்படத்திலும் விவசாயம், கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி இருப்பதால், பழைய படங்களின் தாக்கம் ஆங்காங்கே வந்து செல்கிறது. டி இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.