கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.மேலும் இந்த மாணவியின் தற்கொலை செய்து கொண்ட அடையாளங்களை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள பிரபல மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தற்போது அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சில யூடியூப் சேனல்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவி குறித்த விவரங்கள் பகிரப்படுத்தப்பட்டது .இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு நீதி மன்றம் கடும் கண்டிப்புடன் நடந்து கொண்டது.
மாணவி குறித்த அடையாளங்களை வெளியிட்ட 48 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளன.இந்த 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க : எழுத்தாளரும் நடிகருமான கேகே எஸ் மணி காலமானார் !



