உலகையே குடும்பமாக கருதும் சிந்தனை இந்திய தேசத்துக்கு இருந்தது- மோகன் பகவத்

உலக நாடுகளுக்கு எல்லாம், வேறு நாடுகளை கைப்பற்றுவதில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையே இந்திய தேசத்துக்கு இருந்தது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

வேறுபாடுகள் பல இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறையிலும் முதன்மையாக விளங்கியது.நாடு உன்னதமான நிலையை அடைவதற்கு, தனிமனித நிர்மாணம் மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை, கேசவ் பலராம் ஹெட்கேவர் துவங்கினார்.

தினமும் ஒரு மணி நேர பண்பு பயிற்சி வாயிலாக, தனிமனித நிர்மாணம் மேம்பட்டு, தேசத்தின் புனர் நிர்மாணம் என்ற இலக்கை அடைய ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள், தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய, வேறு எந்த நடைமுறைகளும் தேவையில்லை. உங்கள் அனைவரையும் நம் தேசப்பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன்.

உலக நாடுகளுக்கு எல்லாம், வேறு நாடுகளை கைப்பற்றுவதில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உலகையே குடும்பமாக கருதும் சிந்தனையே இந்திய தேசத்துக்கு இருந்தது. அதனால் தான், உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா விளங்கி வந்தது. மீண்டும் அந்த நிலையை அடைய, ஆர்.எஸ்.எஸ்., பணியாற்றி வருகிறது.