கொரிய நாட்டுப் பெண்கள் அழகின் ரகசியம் !

பெண்கள் எல்லோருக்கும் பார்க்க அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.அதும் கொரிய நாட்டுப் பெண்கள் சருமம் பார்ப்பதற்கு கண்ணாடி போன்று இருக்கும்.வயது முதியவர்களாக இருந்தாலும் சருமத்தில் சுருக்கம் இருக்காது.

உணவு பழக்கம் மற்றும் சரும பராமரிப்பு மிகவும் முக்கியம்.தினமும் காலையும் மாலையும் முகத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்வதால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

அவர்கள் பார்லி தேநீரில் அதிகம் அருந்துவார்கள் .இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. இது எடை குறைக்கும் பானமாக செயல்படுகிறது.

கொரியப் பெண்களின் முக்கிய அம்சமாக இருப்பது வி-வடிவ தாடை.இதற்காக அவர்கள் பேஸ் வொர்க்அவுட் செய்வார்கள்.இதை செய்வதன் மூலம் கன்னம் மற்றும் வாய் பக்கம் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.