கெயில் தாக்குதலை சமாளிக்குமா? மும்பை இந்தியன்ஸ்..!

கெயில் வருகையால் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

பஞ்சாப் அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடினாலும் இறுதியில் முடிவு அவர்களுக்கு சாதமாக அமையவில்லை. முதல் ஏழு போட்டிகளில் ஒரு வெற்றி, ஆறு தோல்வி என துவண்டு போன பஞ்சாப் அணி, பெங்களூருவுக்கு எதிராக கெயிலின் வருகையால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

பேட்டிங் பொறுத்தவரையில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அணியை தூக்கிப் பிடிக்கின்றனர். கெயிலின் வருகை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு நம்பிக்கையும், புத்துயிரும் தந்துள்ளது.பவுலிங்கில் முருகன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். 

இப்போட்டியில் இருந்து அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆக இப்போட்டியில் பஞ்சாப் வெற்றி பெறவேண்டியது மிகவும் அவசியம். மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறந்த அணியாக தெரிகிறது.

டி காக் ரோஹித், சர்மா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், பும்ரா, ராகுல் சஹார், போல்ட் என ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும்  மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னர்களாக இருக்கின்றனர். இருப்பினும் வெற்றிக்காக பஞ்சாப் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை சமாளிப்பது அவர்களுக்கு சவாலானதாக இருக்கும்.

இவ்விரு அணிகள் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் மும்பை 14 முறையும், பஞ்சாப் 11 முறையும் வென்றுள்ளது.