KGF Chapter 2: கே.ஜி.எஃப் : சாப்டர் 2″ திரைப்படம் குறித்த அதிரிபுதிரியான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.
இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுவந்த நிலையில், ஒருவழியாக படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் முடிவடைந்ததால் ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளது. Ads by
பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1, இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப். : சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதமே கே.ஜி.எஃப். : சாப்டர் 2′ திரைப்படம் ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை தீவிரமானதால், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவானது.
இந்தப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் ஏறக்குறைய முடிந்துள்ளதால், கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தை வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2 படத்தின் டிரைலர் மார்ச் 27 ந் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்ற அதிரிபுதிரியான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் மெர்சல் காட்டி மிரட்டி இருந்த யாஷின் அட்டகாசமான நடிப்பை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் வேறலெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
KGF Chapter 2: New Updates About Yash’s Film Announced
இதையும் படிங்க: Holiday Announcement: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை விடுமுறை



