கன்னட நடிகர் யாஷின் கே.ஜி.எஃப் 2 படம் வெளியீடும் தேதி அறிவிப்பு !

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப். கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.தற்போது கே.ஜி.எஃப். 2 படத்தின் வெளியீட்டு தேதியை ட்விட்டரில் அறிவித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

இது உலகம் முழுவதும் ஜூலை 16, 2021 அன்று வெளியாகும் என ஷேர் செய்திருந்தார்.மேலும் யாஷின் தீவிர ரசிகர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் வெளியீட்டு நாளான ஜூலை 16ம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.