கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது

கேரளாவில் 5 மாவட்டங்களில் 8ம் தேதி முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கேரளாவில் வரும் 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 5 மாவட்டங்களில் 8ம் தேதியும், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய 5 மாவட்டங்களில் 10ம் தேதியும், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு 4 மாவட்டங்களில் 14ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.