கொரோனவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மாதம் ரூபாய் 5000 !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக பாதித்தது.மேலும் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் இருந்தது.

கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ .5,000 கூடுதல் நிதி நிவாரணம் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த உதவி மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் மற்றும் இது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி மாநிலத்திற்கு வெளியே அல்லது வெளிநாட்டில் இறந்தாலும் பலன் வழங்கப்படும், ஆனால் குடும்பம் மாநிலத்திற்குள் இருக்க வேண்டும்.

மேலும் இந்த தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதிகபட்சம் 30 வேலை நாட்களுக்குள் பலன் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னை காவல் ஆணையர் மருத்துவமனையில் அனுமதி !