சென்னை காவல் ஆணையர் மருத்துவமனையில் அனுமதி !

சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். காவல் ஆணையர் அலுவலகத்தின் 8வது மாடியில் பணியாற்றி வந்த போது திடீரென ச நெஞ்சு வலி ஏற்பட்டது.இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது அவர் ஜிவாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்