karnataka news : ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

karnataka news
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

karnataka news : நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் பற்றிய சர்ச்சைக்குரிய பிரச்சினை, இறுதியாக கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத அங்கம் அல்ல என்று உயர்நீதிமன்றம் கூறியது. அரசின் உத்தரவு சட்டப்பூர்வமானது என கர்நாடக உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்றும், அரசு ஆடைக் கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு கூறியுள்ளது.

இதில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை தேர்வு அறைக்குள் அனுமதிக்க கூடாது என்று கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் உத்தரவிட்டிருந்தார்.

உடுப்பி மாவட்டம் வித்யோதயா பள்ளியில் இன்று தேர்வு நடைபெற்ற போது ஆலியா அசாதி மற்றும் ரேஷம் ஆகியோர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய கண்காணிப்பாளர்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். அவர்களுடன் சுமார் 45 நிமிடங்களில் மாணவிகள் பேசிய நிலையில், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மாணவிகளுக்கு அனுமுதி மறுத்தனர்.karnataka news

இதையும் படிங்க : Mask in Tamil Nadu: தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.