கவிஞர், பாடலாசிரியர், நடிகர், வசனகர்த்தா, எடிட்டர் என பல முகங்களை கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி பிறந்தார்.
தமிழ் சினிமாவில் 5000க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். 6000க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். 232 புத்தகங்களைம் எழுதி வெளியிட்டுள்ளார் கவியரசு கண்ணதாசன்.
சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள கவியரசு கண்ணதாசன், 1969ஆம் ஆண்டு வெளியான குழந்தைக்காக படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றார் கண்ணதாசன்.
இன்று கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



