1 ​​மணி 25 நிமிடம் அமெரிக்க அதிபராக மாறிய கமலா ஹாரிஸ் !

அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மொத்தம் ஒரு மணி நேரம் 25 நிமிடங்களுக்கு ஜனாதிபதி அதிகாரத்தை கொண்டு இருந்துள்ளார்.ஜோ பைடன் சிகிச்சைக்கு சென்றதால் கமலா ஹாரிஸ் தற்காலிக அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

தற்காலிகமாக மாற்றப்பட்டதாக அறிவிக்கும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் காங்கிரசுக்கு காலை 10:10 மணிக்கு (1510 GMT) அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது கடமைகளை காலை 11:35 மணிக்கு மீண்டும் தொடங்கினார்” (1635 GMT), வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் அவர் கமலா ஹாரிஸிடம் வழங்கியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.