ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என்றார்.
எங்கள் கட்சி, யாருக்கும் பி.டீம் அல்ல என்றும், நாங்கள் எப்போதும் எங்களுக்கு ஏ டீம்தான் என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம்பெறும் என்றும் கமல்ஹாசன் அப்போது உறுதியளித்தார்.



