ஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி

கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி ரூ.1.16 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலான தொகையை விட 33 சதவீதம் அதிகம் ஆகும்.

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

 இந்த ஆண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வசூலானது, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வசூலான ரூ.87,422 கோடியை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ச்சியாக 8 மாதங்கள் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால் மே மாதம், பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, ஜூன் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றது.
அப்போது, ரூ.92,849 ஆயிரம் கோடி வசூல் ஆனது. தற்போது, தளர்வுகள் அளிக்கப்பட்டதால், ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இது, இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. ஜிஎஸ்டி வசூல், வரும் காலங்களில் அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.