தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டில் அதிகமாக இருந்ததால், கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டன.

மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முழு பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதை கருத்தில் கொண்டும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையிலும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.