சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக பாதித்தது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் தடுப்பூசியை அவசரகாலத்துக்கு இந்தியாவில் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.தற்போது நம் நாட்டில் இரு டோஸ்கள் தடுப்பூசி நடைமுறையில் இருக்கின்றன.

மேலும் தற்போது பரவும் கொரோனா வகை டெல்டா இதற்கு ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் தடுப்பூசி சிறப்பாக செயல்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த தடுப்பூசிக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி மிதமான பாதிப்புக்கு எதிராக 66.3 சதவீதம் செயல்படுகிறது, தீவிரமான நோய் தொற்றுக்கு எதிராக 76.3சதவீதம் சிறப்பாகச் செயலாற்றுகிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் அவசரப் பயன்பாட்டுக்கு ஜான்ஸன் அண்ட்ஜான்ஸன் தடுப்பூசியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.