டிரம்ப்பை வசைபாடிய ஜோ பைடன்

ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இந்த போராட்டம் பற்றி டிரம்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பல்வேறு பதிவுகள் வெளிவந்தன. இதனால், தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில், டிரம்பின் 3 டுவிட்டர் பதிவுகளை அந்த நிறுவனம் நீக்கியது. அவற்றில் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான வீடியோ ஒன்றும் நீக்கப்பட்டது.

மேலும் கும்பல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு குரல்களை நசுக்கப் பார்க்கிறார் டிரம்ப்” என்றா பைடன்.

துணை அதிபராகவிருக்கும் கமலா ஹாரிஸ், “இரண்டு விதமான நீதியைப் பார்த்தோம், கருப்பர்களுக்கு எதிராக தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு, யுஎஸ் கேப்பிடாலுக்குள் நுழைந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுதான் ட்ரம்ப் நியாயம்” என்றார்.

ஜோ பைடன் மேலும் கூறும்போது, “இதே கேப்பிடாலை நேற்று கருப்பர்கள் தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? என்பதும் எனக்குத் தெரியும்.

எனவே அமெரிக்காவில் ஜனநாயகத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் மீட்கக் கடமைப்பட்டுள்ளோம். அமெரிக்க சட்டத்தின் கீழ் அனைவரும் சமமே. இதைச் செய்வதற்கு நீதித்துறை தவிர நமக்கு சிறந்த இடம் வேறில்லை” என்றார் பைடன்.

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையை தொடர்ந்து அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.