குடியரசு தினத்தன்று தடையை மீறி ராஜ்பாத்தில் டிராக்டர் விடுவோம்..!

டெல்லியில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின்போது ராஜ்பாத் பகுதியில் தடையை மீறி டிராக்டர்களை ஓட்டி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவோம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி சிங்கு எல்லை பகுதியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சார்பில் அரசியல் ஆர்வலரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ், “ஜனவரி 26ஆம் தேதி சிங்கு, டிக்ரி, காஸிபூர் எல்லைகளிலிருந்து புறப்படும் டிராக்டர்கள் ரேவாசன் ஹரியாணா, கிழக்கு மற்றும் மேற்கு புறவழி அதிவேக விரைவுச்சாலை மற்றும் இடைப்பட்ட பகுதியில் சந்திக்கும்” என்று கூறினார்.

“இந்த டிராக்டர்கள் ஜனவரி 26ஆம் தேதியன்று என்ன நடக்கும் என்பதற்கான ஒத்திகையாகக் கருதப்படலாம்,” என்று யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.