வெற்றி பெற்றால் சர்வதேச ஜனநாயகக் கூட்டம் கூட்ட ஜோ பிடேன் முடிவு

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்இன்று நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அமெரிக்க அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள உலகமே ஆவலாக உள்ளது. அமெரிக்காவில் டிரம்ப், ஜோ பிடேன் ஆகிய இருவரில் யார் அதிபராக பதவியேற்பர் என்பதை பொறுத்தே உலக பொருளாதாரம் உள்ளது.

ஜோ பிடேன் இதுகுறித்து ஒரு கூட்டத்தில் பேசியபோது ஒருவேளை தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பாக உலக நாடுகளில் உள்ள ஜனநாயகவாதிகள் திரட்டி கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக தெரிவித்தார். தனிமனிதர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சில நாடுகளில் அரசின் செயல்பாடுகள் பொதுமக்கள் மீது திணிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக அந்த கூட்டத்தில் தான் உரையாற்ற உள்ளதாக பிடேன்
கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஜனநாயகத்தின் மூலமே காக்கப்படுகின்றன. ஜனநாயகத்துக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட நாடுகளில் தனிமனிதர்கள் கட்டுப்படுத்தப் படுகிறார்கள். அரசுக்கு எதிராக அவர்களால் கருத்துக் கூற முடியாது. ஒற்றுமை, சமத்துவம், மக்களாட்சி ஆகியவற்றை நிலைநாட்டும் கொள்கையே ஜனநாயக கொள்கை.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த கொள்கையை ஏற்று ஆட்சி செய்து வரும் நிலையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ஜோ பிடேன் ஜனநாயக கொள்கையை ஆதரிக்க இந்த கூட்டத்தை திரட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கம்யூனிசம், சோசியலிசம் உள்ளிட்ட சித்தாந்தங்களில் உள்ள குறைபாடுகள் அலசி ஆராயப்படும். டிரம்ப் சீனாவுக்கு எதிரான போரை மிகப்பெரிய வர்த்தக போறாங்க மாற்றி விட்டார் எனக் குற்றம் சாட்டினார் பிடேன். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பழங்குடி மக்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற மனித உரிமை மீறல்களை ஜனநாயக கூட்டத்தில் தான் எதிர்த்து கேள்வி எழுப்ப உள்ளதாக அவர் கூறியுள்ளார்.