நாளை நினைவிடமாக மாறும் வேதா இல்லம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவிடமாக மாற்றப்பட்டு ஜனவரி 28 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்னதாக வேதா நிலையம் அரசின் அதிகாரபூர்வ நினைவிடமாக மாறுகிறது.

சென்னையின் போய்ஸ் கார்டனில் அமைந்துள்ள ‘வேதா நிலையம்’ தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஜெயலலிதாவின் அண்ணனின் வாரிசுகள் இடையே சட்டப் போர் தொடங்கியது. மூன்று வருட சட்ட போராட்டத்திற்கு பின்னர், மாநில அரசுக்கு இந்த வீடு கிடைத்தது.

சசிகலா இன்று விடுதலை ஆவதை தொடர்ந்து நாளை அதாவது ஜனவரி 28ஆம் தேதி ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவிடமாக மாறுகிறது.