செய்யும் தொழிலே தெய்வம் – ஜெய்ப்பூர் மேயர்க்கு பாராட்டு மழை !

ஜெய்ப்பூர் நகர் நிகாம் மேயர் சௌம்யா குர்ஜார் கடந்த புதன் அன்று மாநகராட்சி கூட்டத்தில் இரவு வரை கலந்து கொண்டார்.பிறகு இரவு பிரசவ வலி ஏற்பட்டு வியாழக்கிழமை அதிகாலை ஒரு ஆண் குழந்தையை பெற்றடுத்தார்.

டாக்டர் குர்ஜார் பிரசவத்திற்கு சில மணிநேரங்கள் வரை பணிபுரிந்தார், வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அவரது பிரசவம் தொடங்கியபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரசவத்திற்கு சிலமணி நேரம் முன்பு வரை வேலை செய்த மேயர் சௌம்யா குர்ஜார் அவர்களை சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.மேலும் தன் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்ததில் பதிவிட்டுள்ளார்.மேலும் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.