அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு !

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.வரும் சட்டமன்ற தேர்தலில் சி.விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார் .

 தொகுதி மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்கள், வேட்டி, சேலை, பித்தளைப் பானையுடன் பொங்கல் பரிசுப் பொருட்கள் என ஏராளமான பொருட்களை வழங்கியுள்ளார்.

மேலும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பரிசு பொருட்கள் தர உள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.நேற்று அமைச்சரின் ஆதரவாளரான வீரபாண்டியனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.