வலிமை டப்பிங்கை முடித்த அஜித் !

நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.இவரை பொது நிகழ்ச்சிகளில் பார்ப்பது அரிது.தற்போது அஜித் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதை பற்றி ரசிகர்கள் வலிமையின் அப்டேட் கிடைக்குமா என்று சமூகவலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

இந்த படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர்.தற்போது,நடிகர் அஜித் தனது வலிமை படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போனி கபூர், வலிமை படம் ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய ஒரு பவர் பேக்டு குடும்பப் படமாக இருக்கும் என்றார். இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.