முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு !

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்கள் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காலை 7 மணியில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் விஜயபாஸ்கர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி மீதும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவும் செய்திருக்கிறது.

அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிலும், கல் குவாரி அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !