வெற்றியை நிலைநாட்டிய : பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்!

கடந்த மாதம் ஏழாம் தேதி பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.இதில் இடம்பெற்றிருந்த இ.ஓ.எஸ்.-1 செயற்க்கைக்கோளானது விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக தகவல் தொடர்புக்கு உதவும் சிஎம்எஸ் – 1 செயற்கைக் கோளுடன் கூடிய பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரகமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆராய்ச்சி மையத்திலிருந்து 25 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.சிஎம்எஸ் 01 செயற்கைக் கோளானது, தகவல் தொடர்பு வசதிக்கான சி- பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.