அட்லீ – ஷாருக்கான் இணையும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்..!

இயக்குநர் அட்லீ – நடிகர் ஷாருக்கான் இணையும் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அட்லீ தற்போது தனது படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் மும்முரமாக உள்ளார். அவரது படத்தில் ஷாருக் கான் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என்ற பேச்சும் உள்ளது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்