உங்களுக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளதா ..உணவில் கவனம் தேவை !

ஒவ்வொரு பெண்களுக்கும் மாதவிடாய் என்பது மிகவும் முக்கியம்.பருவமடைதல் தொடங்கி திருமணம், குழந்தைபேறு, பிரசவம், மெனோபாஸ் என ஏறத்தாழ 40 வருடங்கள் வரை மாதவிடாய் பெண்கள் இதை அனுபவிக்கிறார்கள்.

பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

சிலருக்கு மாதவிடாய் பிரச்சனை உள்ளது என்றால் அவர்கள் உணவில் கவனம் தேவை.ஒரு கைப்பிடி அளவு பாதாமை சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான கொலஸ்டிரால் கிடைத்துவிடும்.

காய்கறிகள், கீரைகள். பருப்புகள், தானியங்கள் இரும்புச்சத்து நிறைந்தவை இவைகளை உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும்.உலர் திராட்சை, பேரீச்சை பழம், அத்திபழம் போன்றவற்றை எடுத்து செல்லலாம்.

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும்.