சுற்றுலாவுக்கு தயாராகும் கூடுதல் ரயில்கள் !

Train accident
ஆந்திரா ஸ்ரீகாகுளத்தில் ரயில் விபத்து

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் மாதம் முதல் இருந்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

தற்போது மக்கள் சுற்றுலாசெல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க ஐஆர்சிடிசி தயாராகி வருகிறது.

இதுகுறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் தெரிவிப்பது,நாடு முழுவதும் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.சுற்றுலாத் தலங்களும் படிப்படியாக திறந்து வருவதால், சுற்றுலா செல்ல மக்கள் விரும்புகின்றனர்.இதனால் , ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் இயக்கப்பட உள்ளன.

மேலும் விமான சுற்றுலாவுக்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. விரைவில் திட்ட விவரங்கள் அறிவிக் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.