தமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அரிசி அட்டைதாரர்களுக்கு கடந்த மே 15-ம் தேதி,முதல் தவணையாக ரூ.2 ஆயிரம்,ஜூன் 15-ம் தேதி ரூ.2 ஆயிரம் எனமொத்தம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா மற்றும் இதர காரணங்களால் நிவாரணத் நிதி பெறாதவர்கள் வரும் 31-ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். புதியகுடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன்பொருள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.