அட இப்படி கூட தண்டனை நிறைவேற்றமுடியுமா !

ஈரானைச் சேர்ந்த ஜஹாரா இஸ்மையிலி என்ற பெண், தன்னையும் தனது மகளையும் துன்புறுத்தி வந்த கணவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அந்நாட்டு வழக்கப்படி கொலை குற்றத்திற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டனை நிறைவேற்றும் நேரம் நெருங்கியது அப்போது அவர் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே ஜஹாராவுக்கு முன்னதாக 16 குற்றவாளிகள் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் அவர்கள் இறப்பதை கண்ணால் பார்க்க வேண்டும் என்பது அவருக்கு விதிக்கப்பட்ட ஆணையில் ஒன்றாகும்.அப்போது ஒவ்வொரும் இறப்பதை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜஹாராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் ஈரான் நாட்டு சட்டப்படி அங்கு கொலை குற்றம் நிறைவேற்றுவதற்கு சில முறைகள் உண்டு.தண்டனைக்கு முன்பு அவர் இறந்தாலும் அந்த நாட்டு சட்டத்தின்படி உயிரற்ற உடலை தூக்கில் தொங்கவிட்டு தண்டனையை காவல் அதிகாரிகள் நிறைவேற்றினர்.