சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபில் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
துபாயில் நடைபெறும் இந்தபோட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, ஐதராபாத் அணி முதலில் பந்து வீசுகிறது.