ஐபிஎல் 5ஆவது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி களமிறங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளதில் மும்பை 19 போட்டிகளிலும், கொல்கத்தா 6 போட்டிகளிலும் வென்றுள்ளன. பெரும்பாலும் அதாவது 24 ஆட்டங்களும் லீக் சுற்றுகளாக இருந்தன.

இந்த 2 அணிகளும் 2017ல் மட்டுமே கூடுதலாக 2வது எலிமினேட்டர் சுற்றில் மோதின. அதிலும் மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here