சர்வதேச விமானங்களுக்கு தொடரும் தடை

நம் நாட்டில் சர்வதேச விமானங்கள் இயக்கத்திற்கான தடை, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு மார்ச், 23 முதல் நம் நாட்டில் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின், பயணியரின் தேவையை கருத்தில் வைத்து மே, 2020 முதல் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமானங்களை இயக்கும் பணிகள் துவங்கின.

ஜூலையில் அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, பூடான், பிரான்ஸ் உட்பட 24 நாடுகளுடன், சர்வதேச விமானங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதற்கிடையே நாட்டில் வழக்கமான சர்வதேச விமானங்களுக்கான தடை ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.இருப்பினும், குறிப்பிட்ட வழித்தடங்களில் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.