ஜவாத் புயல் நாளை ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவின் கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.இதன் காரணமாக East Coast Railway 95 ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
Cyclone Jawad ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால், டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட 100 ரயில்களை ரத்து செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 3-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை மற்றும் தீயணைப்புத் துறை பணியாளர்களை ஒடிசா அரசு கோரியுள்ளது.



