Indian Army Helicopter Crash update:ஜெனரல் ராவத்தின் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்பு !

Indian Army Helicopter Crash
ஜெனரல் ராவத்தின் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மீட்பு

இந்திய ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் ப அவர்கள் பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் காட்டேரி-நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விளக்கமளிக்கிறார். Indian Air Force successfully recovered Black Box of the Mi-17 helicopter.

இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதிக்கு உலகம் முழுவதிலும் இருந்து அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.

இந்திய விமானப் படையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிளாக் பாக்ஸின் ஃப்ளைட் ரெக்கார்டரைக் கண்டுபிடித்து மீட்டெடுத்தது. காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு சரியாக என்ன நடந்தது என்பதற்கான இறுதித் தருணங்களுக்கான திறவுகோலை கருப்புப் பெட்டி வைத்திருக்கிறது.

ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி ஆய்வு செய்த பிறகே ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.