இனி பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம்- அதிரடி உத்தரவு

இந்தியாவில் வசிக்கும் அனைவரும் கண்டிப்பாக ஆதார் கார்ட் வைத்திருக்க வேண்டும். இது வாழ்வின் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் தேவை என்னும் கட்டாயமும் உள்ளது.

ஆனால் குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதில் பல சிக்கல்கள் நிலவி வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அவசியமாகும். குழந்தைகளை தற்போது ஆதார் மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. படிவத்தை வாங்கி வீட்டிலேயே பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் எடுக்கப்படுவதில்லை. பெற்றோர் கொடுத்த தகவலுடன் குழந்தையின் புகைப்பட்த்தை வைத்து யுஐடி உருவாக்கப்படும். இது பெற்றோர் யுஐடி உடன் இணைக்கப்படும். 5 வயதிற்கு பின் பயோமெட்ரிக்ஸ் விவரங்களை பதிவு செய்யலாம். 15 வயதிற்கு பின் மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடையாள அட்டை ஏதெனும் ஒன்று இருக்க வேண்டும். இலவசமாக விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here