இந்திய-சீன ராணுவம் 7ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது!

எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்தியா – சீனா அதிகாரிகள் இதுவரை 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.

இந்த நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வரும் அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.