பள்ளிகளை திறக்கும் முடிவு குறித்து ஐசிஎம்ஆர் தலைவர் கருத்து !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்கப்படுமா என்று கேள்வி எழுகிறது.இது குறித்து ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா கூறுவது,பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிப்பது சிறந்தது என்று கூறியுள்ளார்.

தொற்றுப் பரவலைக் கையாளுவதில் இளைஞர்களைவிடக் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள்.மேலும் ,இரண்டு மற்றும் மூன்றாம் அலை உள்ள நாடுகளில் ஆரம்பப் பள்ளிகள் மட்டும் மூடாமல் இருந்தன.

அதனால் இந்தியாவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.