ஐசிஐசிஐ வங்கியில் ‘ஐமொபைல் பே’ தொடக்கம்!

அனைத்து வகையான வங்கி பணப் பரிவர்த்தனைகளையும் ஒரே அப்ளிகேஷனில் (செயலி) பெரும் வகையில் பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ, ஐமொபைல் பே என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் யூபிஐ எண்கள் மொபைல் போனில் சேமித்துவைக்கப்படும் வசதியும் உள்ளது. பணப் பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கும் நிலையில், இது எளிதாகவும், அதேநேரம் நம்பிக்கைக்குரிய வகையிலும் இருக்கும் என்று ஐசிஐசிஐ வங்கி அறிக்கை கூறுகின்றது.