பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது புகார்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின்  தந்தை இறப்பு குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.

எச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவாஹிருல்லா தான் என்ற கருத்தை கூறியிருந்தார். எச்.ராஜாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொய்யான கருத்துகளை பரப்பிவருவதாக எச் ராஜா மீது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அப்ரார் ,நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாக பல வருடங்களுக்கு முன்பு இறந்ததாகவும், வேண்டுமென்றே எச்.ராஜா சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவின் பெயரை கெடுப்பதற்காக பொய்யான கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எச்.ராஜா கருத்து தெரிவித்து வருகிறார்.