பெட்ரோல் விலையேற்றம் செய்தது சரிதான்- எச்.ராஜா

பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றம் செய்தது சரிதான். விலை ஏற்றம் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததைவிட குறைவுதான், என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்பது தொடர்பாக ஈரோட்டில் பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற எச்.ராஜா பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றம் செய்திருப்பது சரிதான். விலை ஏற்றம் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததைவிட குறைவுதான். உணவுப்பொருட்களின் விலையேற்றமும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்ததைவிட குறைவுதான்.

காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றம் 3.9 சதவீதமாக இருந்தது. தற்போது பாஜக ஆட்சியில் விலை உயர்வு 2.6 சதவீதமாகத்தான் உள்ளது. ஆரியர் என்பதற்கு பண்பாளர், ஆசிரியர், உயர்ந்தவர் என்பதுதான் அர்த்தம். திருவள்ளுவர் உயர்ந்தவர் என்றார்.