Digital Marketing: டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

how-to-start-your-career-in-digital-marketing
டிஜிட்டல் மார்க்கெட்டிங்

Digital Marketing: தொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம் (technology) பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது.

மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் (strategy) மூலம் பொருட்கள் / சேவையை சந்தைப்படுத்தலாம்.

Social Media Marketing
இன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை (Social media) பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும்.

Face book, Twitter, Google plus, linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும், என்னென்ன தயாரிப்புகள் (products) / சேவைகள் (service) வழங்குகிறீர்கள், அது மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, ஏன் வாடிக்கையாளர்கள் உங்களிடம் வாங்க வேண்டும், எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து வாங்குவதால் அவர்கள் என்னென்ன பலன்களை அடைய போகிறார்கள் போன்ற தகவல்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் பதிவிடவேண்டும்.

தொழிலைப் பற்றின தகவல்களை பரிமாற படங்கள் (images), வீடியோக்கள் (video), இன்போ கிராபிக்ஸ் (infographics), கிராபிக்ஸ் மற்றும் டிசைன்களை (graphics & design) பயன்படுத்துவது போன்றவை வாடிக்கையாளர்களை எளிதாக சென்றடைய உதவும்.

Face book group, google plus collection போன்றவற்றில் தொழிலைப் பற்றி பதிவிடலாம். சமூக வலைத்தளத்தில் அதிகமான follower களை கொண்டவர்கள், ஆளுமை கொண்ட மனிதர்கள், பிரபலமானவர்கள் ஆகியவர்களை அணுகி அவர்களின் வலைத்தள பக்கத்தில் தொழிலைப் பற்றி பகிர செய்யலாம்.

Search Engine Optimization (SEO)
நமக்கு எந்த தகவல்கள் வேண்டுமென்றாலும் பெரும்பாலும் கூகுள், யாஹூ போன்ற இணைய தேடு பொறிகள் (search engine) மூலமே தேடுகிறோம். ஒரு தொழில் அதிகமான வாடிக்கையாளர்களை பெறவேண்டுமென்றால், அதன் இணையதளங்கள் தேடு பொறியின் பக்கங்களில் இடம்பெறவேண்டும். தேடுபவர்கள் பெரும்பாலும் முதல் 4 பக்கங்களில் என்ன இணையத்தளங்கள் இடம்பெறுகிறதோ அதை மட்டுமே அணுகுவர்.

இதனால் தொழிலின் இணையத்தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கங்களில் இடம்பெறச் செய்வது முக்கியம். இதற்காக என்ற Search Engine Optimization (SEO) உத்திகள் பயன்படுத்தப்படுகிறது. Search Engine Optimization (SEO) மூலம் இணைய தளத்தை தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் கொண்டுவரலாம்.

Search Engine Marketing (SEM)
Search Engine Marketing (SEM) என்பது ஒரு வகையான இணைய மார்க்கெட்டிங் (internet marketing) ஆகும். PPC (Pay per click) ads, CPC (cost per click) ads, CPM (cost per impressions) ads – உதாரணத்திற்கு google Adwords, Search analytics, Web analytics, Display advertising, Ad blocking, Contextual advertising, Behavioral targeting, Affiliate marketing, Mobile advertising போன்றவைகள் இதில் பயன்படுத்தப்படுகிறது. போன்றவைகள் இந்த வகை டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இணைய நிறுவனங்கள் குறிப்பிட்ட சேவை கட்டணங்கள் வசூலிக்கின்றன.

Content Marketing
தொழிலை பற்றிய content ஐ சந்தைப்படுத்துவதையே Content Marketing என்று சொல்லலாம். இணையத்தளத்தில் (website) சிறந்த உள்ளடக்கத்தை (content) பயன்படுத்துவது, அடிக்கடி நிறுவனம், தயாரிப்பு மற்றும் சேவை சார்ந்த கட்டுரைகளை (post) Blog யில் பதிவிடுவது, எளிதில் புரியும்படியாக சிறந்த படங்கள் (image), எடுத்துக்காட்டுகள் (Illustrations), சான்றுகள் (Testimonials), இன்போ கிராபிக்ஸ் (infographics) போன்றவைகளை பயன்படுத்துவது,

Content ஐ சமூக வலைத்தகளத்தில் (social media) பதிவிடுவது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஊடகம் (online media), இதழ்கள் (magazines), செய்தித்தாள்கள் போன்றவற்றில் வெளியிடுவது, வீடியோக்களை (visuals,video) பயன்படுத்துவது அதை சந்தைப்படுத்துவது போன்ற பலவகை சார்ந்த Content Marketing செய்யலாம்.

Email Marketing
வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு மற்றும் சேவையை பற்றி தெரியப்படுத்த அவர்களின் ஈமெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்புவது Email Marketing ஆகும். பல ஈமெயில் மார்க்கெட்டிங் நிறுவனம் மூலம் மொத்தமாக மின்னஞ்சல்களை அனுப்பலாம்.

Mobile Marketing
பெரும்பான்மையானவர்கள் இணையத்தை மொபைல் மூலமே பயன்படுத்துகின்றனர். எனவே Mobile Marketing செய்வது தொழிலுக்கு மிகவும் அவசியமாகிறது. Push notifications இது ஒருவகையான மொபைல் மார்க்கெட்டிங் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளரின் மொபைல்க்கு நேரடியாக தகவல், செய்திகள் போன்ற அறிவிப்புகளை அனுப்பலாம்.

இவை அனைத்தும் சேர்ந்தது தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங். இந்த துறை வளர்ந்து வருவதால், கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை இந்த துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்புகளை எங்கு படிக்கிறது? எப்படி படிக்கிறது ? என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா?

இதனை ஆன்லைன் மூலம் படிக்கலாம். ஆன்லைன் படிப்புகளை பொறுத்தவரை வேலைக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை நேரம் முடிந்தபின் வீட்டிற்கு வந்து தங்கள் ஓய்வு நேரத்தில் சவுகரியமாக படிக்க முடியும். நகரங்களில் உள்ள சிறந்த கல்விநிறுவனங்களை தேடி அலையும் நேரத்தை நாம் இதன் மூலம் மிச்சப்படுத்தலாம். மூன்று மாதம் கொண்ட இந்த படிப்பை பயில ஒரு லட்சம் வரை செலவு செய்கின்றனர். ஆனால் வெறும் 38,999 ரூபாயில் இந்த படிப்பை படித்து வேலை பெற விரும்பினால் ஒன்பது நான்கு எட்டு ஒன்பது எட்டு ஏழு பூஜ்யம் இரண்டு ஒன்னு மூன்று அல்லது எட்டு ஆறு ஒன்று பூஜ்யம் ஐந்து ஒன்பது ஒன்பது ஏழு நான்கு இரண்டு என்ற நம்பரை வாட்ஸ் அப் அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

How to start a career in digital marketing

இதையும் படிங்க: World Wildlife Day: உலக வனவிலங்கு தினம்: விழித்துக்கொள் மனிதா! பிழைத்துக்கொள் மனிதா!!