டவுண்லோடு கோவிட்-19 தடுப்பூசி சர்டிபிகேட்டை

கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மூத்த குடிமக்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதோடு அதற்கான சான்றிதழை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வதும் முக்கியம்.

சர்வதேச பயணம் போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் அவசியம். கோவிட்-19 சான்றிதழை CoWin இணையதளம் மற்றும் செயலி, ஆரோக்கிய சேது (Aarogya Setu)செயலி ஆகியவற்றின் மூலம் டவுண்லோடு செய்யலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியின் தற்போதைய வடிவம். தடுப்பூசி போடப்பட்ட பயனர் எண் (Beneficiary Reference ID), மொபைல் எண் ஆகியவை இருந்தால் சான்றிதழை தரவிறக்கம் செய்யலாம். தடுப்பூசி போடும்போது தொடர்பு எண்ணாக நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணும், ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்ய பயன்படுத்திய அலைபேசி எண்ணும் ஒன்றாக இருக்கவேண்டும்.