மாட்டுப் பொங்கலுக்கு பதில் குதிரை பொங்கல் கொண்டாடும் கிராம மக்கள்

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது உண்டு. ஆனால் திண்டுக்கல் அருகே குதிரைகளை வைத்து குதிரை பொங்கல் கொண்டாடுகின்றனர் அக்கிராம மக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மலைப்பகுதியில் குதிரை பொங்கல் கொண்டாடுவது வழக்கம். தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய குதிரைகளைத் தெய்வமாகக் கருதி அதனைக் குளிப்பாட்டி அதற்கு அலங்காரம் செய்து மாலை அணிவித்து வழிபாடு செய்து குதிரைக்கு உணவு ஊட்டி விட்டனர்.

இந்த நாளில் குதிரைக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டு அதனைச் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படும். கிராம மக்கள் குதிரையைத் தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.