Horoscope today: இன்றைய ராசி பலன்

Today horoscope
ராசி பலன்

Horoscope today: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நலம் தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய தொழிலில் லாபம் காணலாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட தன லாபம் பெருக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் தேவை. பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் மாற்றம் காண்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை வெளியிட பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கடமையில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்கவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தள்ளி செல்லும். கணவன் மனைவி ஒற்றுமையில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் இருக்க கூடிய முயற்சிகளுக்கு பலவிதங்களிலும் எதிர்ப்புகள் வலுவாகும். சுய தொழில் புரிபவர்களுக்கு துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டகால கனவுகள் பலிக்க கூடிய நாளாக இருக்கும். சக போட்டியாளர்கள் உடன் இணைந்து செயல்படுவீர்கள்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மேலோங்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகளையும் எதிர்த்து துணிச்சலுடன் போராடக் கூடிய தன்னம்பிக்கை வளரும்.

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண வரவு உண்டாவதில் சிறப்பான பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் பல வழிகளிலும் இருந்து வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சேமிப்பு உயரும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணத்தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேச்சில் பொறுமையை கையாளுவது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கி தெளிவாக இருப்பது நல்லது. தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து உங்கள் வழியில் நடப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு முடிவையும் தன்னம்பிக்கையுடன், துணிச்சலுடன் எடுப்பது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொலை தூர இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் அதிகம். உங்கள் நேர்மைக்கு உரிய பரிசு கிடைக்கும். அசிங்க மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் உண்டாகும்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் எங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று இருப்பது நல்லது. உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு உற்சாகம் இருக்கும்.Horoscope today

இதையும் படிங்க : TN teachers: ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியால் கற்பித்தல் பணி பாதிப்பு

( Horoscope update for 04-04-2022 )