உச்சி முதல் பாதம் வரை அழகாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும்.இதில் முக்கியமானவை என்ன வென்றால் நாம் எல்லாவற்றிக்கும் முறையான கவனம் செலுத்துகிறோமா என்று கவனிக்க வேண்டும்.
முகத்திற்கு அதிக கவனம் செலுத்துபவர்கள் கழுத்து பகுதிக்கு அதிக கவனம் செலுத்த மாட்டார்கள்.அதே போல் கைகளை பராமரிக்க வேண்டுமென்றால் நகங்களையும் சீராக பராமரிக்க வேண்டும்.
முதலில் நகங்களை சீராக வெட்ட வேண்டும்.வாரம் ஒரு முறை கை நகங்களை சுத்தம் செய்யவேண்டும்.ஈரப்பதமுள்ள ஆரோக்கியமான சருமம் மிக முக்கியம்.அதே போல் உலர்ந்த, உடையக்கூடிய நகங்கள் பல காரணிகளின் விளைவாக இருக்கலாம், இதில் மிக முக்கியம் ஈரப்பதம்.
கை லோஷனைப் பயன்படுத்தும்போது, உங்கள் நகங்களுக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.அதிக நேரம் கைகளை நீரில் இருப்பதாய் தவிர்க்கவும்.
தக்காளி பல வகைகளில் உடலுக்கு நன்மைகளை அளிக்கக கூடியது. நகத்திற்குத் தேவையான வைட்டமின் A மற்றும் C இருக்கிறது. தினமும் தக்காளி சாறில் உங்கள் நகங்களை 10 நிமிடங்கள் அப்படியே முக்கி வையுங்கள்.



